| மண் லாரி சிறைபிடிப்பு Dinamalar
மண் லாரி சிறைபிடிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
05:50

நத்தம்:நத்தம் பகுதி கண்மாய்களில் மண் அள்ளிய லாரியை அ.ம.மு.க.,வினர் சிறை பிடித்தனர்.நத்தம்- - மதுரை நான்கு வழிச்சாலை பணி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடக்கிறது. பணி முடிந்த ரோட்டோர பள்ளங்களை சமன் செய்ய மண் கொட்டப்படுகிறது. இதற்காக நத்தம் பகுதி கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக புகார் எழுந்தது.



இதையடுத்து கண்மாயில் மண் அள்ள பயன்படுத்திய இயந்திரம், லாரியை அ.ம.மு.க., வினர் சிறை பிடித்தனர். நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X