| தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு Dinamalar
தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
06:12

பேரையூர்:பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக சர்வேயர் பிரிவில் லஞ்ச ஓழிப்பு துறையினர் ரெய்டு நடத்தினர்.இத்தாலுகாவில் பேரையூர், மோதகம் உள்ளிட்ட ஆறு பிர்க்காக்கள் உள்ளன. நிலம், இடம் சப் டிவிஷன் செய்தல் போன்ற பணிகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டது.



இதுகுறித்து தினமலரில் ஆக., 1 ல் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சர்வேயர் பிரிவில் ஆவணங்களை சோதனை செய்து கணினிகளை ஆய்வு செய்தனர். தலைமை சர்வேயர், சர்வேயர்களிடம் விசாரித்தனர்.



எம்.கல்லுபட்டி அம்மாசி நிலஅளவை செய்ய மனு செய்த நிலையில் காலம் கடத்தியதாக புகார் குறித்து விசாரணை நடந்தது. இன்று (ஆக.6) அனைத்து ஆவணங்களுடன் மதுரை லஞ்ச ஒழிப்புதுறை அலுவலகத்தில் அனைத்து சர்வேயர்கள் ஆஜராக உத்தரவிடப் பட்டது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X