சுழற்றி அடிக்குது! பருவமழையுடன் சூறாவளிக்காற்று:பல இடங்களில் மரம் விழுந்து சேதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
08:25

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், சூறாவளிக்காற்றுடன் மழை பெய்வதால், வாழை, தென்னை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், மின் கம்பிகள் அறுந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு சுற்றுப்பகுதிகளில், இரு நாட்களாக மழை பெய்கிறது. அதிவேக சூறாவளிக்காற்றுடன் மழை தீவிரமடைந்தது. மணிக்கு, 47 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதனால், ஆனைமலை, சோமந்துறைசித்துார், பெத்தநாயக்கனுார், வஞ்சியாபுரம் பகுதிகளில், பல இடங்களில் தென்னை மற்றும் வாழை மரங்கள் சாய்ந்து, பயிர் சேதம் ஏற்பட்டது.ஐந்து மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்கள், அதிவேக காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் சாய்ந்தது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.பல இடங்களில் தென்னந்தோப்புகளில், மின் கம்பிகளில் மட்டைகள் விழுந்தது. ரோட்டோர மரங்கள், மரக்கிளைகள் விழுந்து, போக்குவரத்து பாதித்ததுடன், மின் தடையும் ஏற்பட்டது.பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் காலனியில் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்தது. அப்பகுதியை சேர்ந்த கட்டுமானப்பணிக்கு செல்லும் ராஜ் என்பவரது வீடு சேதமடைந்துள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் சூளேஸ்வரன்பட்டி அருகே ரோட்டோரம் இருந்த மரம் காற்றுக்கு சரிந்து விழுந்தது; மின் கம்பங்களும் சரிந்தன.அவ்வழியாக பைக்கில் வந்த நல்லுாரை சேர்ந்த சக்ரவர்த்தி, 21, என்பவர் மீது மரம் விழுந்ததில், படுகாயமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.இதையடுத்து, அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ரோட்டில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியிலும்; விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கி நின்ற கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.மின்வாரியத்தினர் தொடர்ந்து பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், பயிர் சேதம் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.மின் பாதிப்புமின்வாரியத்தினர் கூறியதாவது: பொள்ளாச்சி, ஆழியாறு, கோட்டூர், அங்கலக்குறிச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் இன்று (நேற்று) மதியம் வரை நடத்திய கணக்கெடுப்பில், 30 மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்துள்ளது.டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட வனப்பகுதி, வனத்தையொட்டிய பகுதிகளில் இன்னும் அதிக பாதிப்பு உள்ளது.அதிவேக காற்றினால், பத்து அடி தொலைவு வரையில் மரக்கிளைகள் பறந்து கம்பிகளில் விழுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் ஆய்வு செய்து, பாதிப்புகளை அதிவேகமாக சரிசெய்து மின் இணைப்பு வழங்கி வருகிறோம்.இவ்வாறு, மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.10ம் தேதி வரை 45 கி.மீ., வேகம்!கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தின் அறிவிப்புப்படி, இன்று முதல் 10ம் தேதி வரை, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களில், 10 முதல் 45.4 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்று, 6ம் தேதி அதிவேகத்தில் காற்று வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வாழை மரங்களுக்கு முட்டுக்கொடுத்து பாதுகாக்க வேண்டும். நோய் பாதித்த தென்னை மரங்கள் அருகில், நிற்பதை தவிர்க்க வேண்டும். அதிவேக காற்றில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டோரத்தில், வலுவிழந்த மரங்கள், கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். மின்வாரியத்தினர் சிதிலமடைந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X