உயிரிழந்தது இலங்கை தாதாவா? டி.என்.ஏ., பரிசோதனைக்கு திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
08:39

கோவை:கோவையில் இறந்தவர் இலங்கை தாதா என்பதை, டி.என்.ஏ., பரிசோதனை மூலம் உறுதி செய்ய சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா மர்ம மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார், கோவையில் விசாரித்து வருகின்றனர். அங்கொட லொக்கா என்பதை உறுதிப்படுத்த, உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகளை டி.என்.ஏ., ஆய்வுக்கு உட்படுத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இறந்த நபரின் உடல், கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக, பரிசோதனையின்போது, சிறிய அளவில் குடல், வயிற்று பாகங்கள், கல்லீரல், சிறுநீரகம்,மண்டல தடயவியல் ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த உடல் உறுப்புகளை டி.என்.ஏ., ஆய்வுக்கு உட்படுத்தும்போது உயிரிழந்தவர் யார் என, எளிதில் கண்டறிய முடியும்.இறந்த நபரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை கொண்டு டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கொட லொக்காவின் உறவினர்களின் டி.என்.ஏ., உடன் ஒப்பிட்டு பார்த்து, உயிரிழப்பை உறுதி செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.மேலும், மாரடைப்பினால் தான் இறந்தார் என்பதை அறிந்து கொள்ள, 'ஹிஸ்டோபேதாலஜி' எனும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் முடிவுக்காகவும் போலீசார் காத்திருக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X