| கருணை தொகை கேட்டு அலுவலர் போராட்டம் Dinamalar
கருணை தொகை கேட்டு அலுவலர் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
08:55

திருப்பூர்:கொரோனாவால் இறந்த அரசு அலுவலருக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தற்செயல் விடுப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது.'கொரோனா பணியில் இறந்த வருவாய்த்துறை அலுவலர் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதித்தவர்களுக்கு, சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; இரண்டு லட்சம் ரூபாய் கருணை தொகை வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், நேற்று முதல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழக அரசு அறிவித்தபடி, கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள, அரசுத்துறை அலுவலருக்கு, உரிய நிவாரணமும், கருணை தொகையும் வழங்க வேண்டும். மாநில அளவில், வருவாய்த்துறையில் மட்டும், 14 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்; நேற்றைய நிலவரப்படி, 310 பேருக்கு கொரோனா தொற்று பரவி, சிகிச்சை பெற்று வருகின்றனர்' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X