காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: கபினியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
09:30

மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, நீர்வரத்து அதிகரித்ததால், கபினி அணையில் இருந்து வினாடிக்கு, 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.


கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. கொள்ளளவு, 19.5 டி.எம்.சி., கர்நாடகா - கேரளா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், நேற்று முன்தினம், 10 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த, கபினி நீர்வரத்து, நேற்று, 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அதற்கேற்ப, அணை நீர் இருப்பு, 17 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணை நிரம்ப, 2.5 டி.எம்.சி., தேவையாக இருந்த நிலையில், நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், அணை பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் காலை, 10 ஆயிரத்து, 500 கனஅடியாக இருந்த கபினி நீர்திறப்பு, இரவில், 32 ஆயிரம் கனஅடி, நேற்று காலை, 11:00 மணிக்கு, 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அதேபோல், கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124 அடி. கொள்ளளவு, 49 டி.எம்.சி., நேற்று, அணை நீர்மட்டம், 107 அடி, நீர் இருப்பு, 28 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்ப, 21 டி.எம்.சி., தேவைப்பட்ட நிலையில், நேற்று வினாடிக்கு, 20 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. அணையில் இருந்து, 1,500 கனஅடி நீர் மட்டும் வெளியேற்றப்பட்டது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், வினாடிக்கு, 41 ஆயிரத்து, 500 கனஅடி நீர் வெளியேற்றுவதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம், 64.15 அடி, நீர் இருப்பு, 27.87 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 3,613 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர், இன்று மாலை, மேட்டூர் அணையை வந்தடையும் என்பதால், வரும் நாளில், மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர வாய்ப்புள்ளது.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X