3வது காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும்: மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2020
10:10

நாமக்கல்: ''மூன்றாவது முறைக்கான காலாண்டு வரியை, மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.



இதுகுறித்து, நாமக்கல்லில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஏழு லட்சத்திற்கும் அதிகமான லாரிகள், ட்ரெய்லர்கள், டேங்கர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் உள்ளன. ஊரடங்கால், பெரும்பாலான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து, விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், விவசாயம், பால், கால்நடைகள் சம்பந்தமான போக்குவரத்து மட்டுமே நடக்கிறது. பல முக்கிய நகரங்களில், சரக்கு லோடு இல்லாமல், பல நாட்கள் லாரிகள் காலியாக நிறுத்தப்பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள வாகன கடனுக்கான கால அவகாசத்தை, ரிசர்வ் வங்கி, ஆறு மாதம் நீட்டிப்பு செய்தது. அதை, மேலும், ஆறு மாதம் வட்டியின்றி நீட்டிக்க வேண்டும். லாரிகளுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல், வாகனங்களுக்கான டிரைவிங் லைசென்ஸ், என்.பி., பர்மிட், எப்.சி., சான்றுகள் புதுப்பித்தல் ஆகியவற்றை, மேலும், ஆறு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும். வாகனங்களை நிறுத்தி வைத்துள்ள நிலையிலும், லாரிகளுக்கான காலாண்டு வரியை, ஏற்கனவே, இரண்டு முறை செலுத்தியுள்ளோம். மூன்றாவது முறைக்கான காலாண்டு வரியை, மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். வேகக்கட்டுப்பாடு கருவியை, ஏற்கனவே லாரிகளுக்கு பொருத்தியுள்ளோம். ஆனால், தற்போது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டும்தான் வேகக் கட்டுப்பாட்டு கருவியை வாங்கி பொறுத்த வேண்டும் என, மாநில அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில், அரசின் இதுபோன்ற செயல்கள், லாரித் தொழிலை மேலும் நலிவடையச் செய்யும். மத்திய, மாநில அரசுகள், எங்கள் கோரிக்கைகளை, இரண்டு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், வரும், 20ல், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டத்தை கூட்டி, தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X