சென்னையில் 740 டன் அமோனியம் நைட்ரேட்: லெபனானைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் ராமதாஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

06 ஆக
2020
13:01
பதிவு செய்த நாள்
ஆக 06,2020 12:59

சென்னை: 'சென்னை துறைமுகத்தை ஒட்டியுள்ள கிடங்கில் 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேடை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில், 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்; 4,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்; பல லட்சம் பேர் ஒரே நொடியில் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த துயர்மிகுந்த வெடி விபத்துக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில், 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து, 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. லெபனானில் மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதற்கு இந்த வெடிமருந்து தான் காரணம்.சென்னை கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரேட்டால் அதேபோன்ற வெடிவிபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க, அந்த வெடிமருந்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, உரம் தயாரிப்பு போன்ற பிற தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (21)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.KESAVAN - chennai,இந்தியா
06-ஆக-202019:55:03 IST Report Abuse
B.KESAVAN It is common practice of stocking ammonium nitrate in temporary warehouses for short time period, concern people aware of that its explosive raw material they will take necessary action,
Rate this:
Cancel
samvijayv - Chennai,இந்தியா
06-ஆக-202019:10:09 IST Report Abuse
samvijayv எத்தனை அரசியல் தலைவர்கள்.., இருந்தும் இதுபோல் மக்களுக்கு வரும் ஆபத்தை சில நேரங்களில் மட்டும் அல்ல பல நிகழுவுகள் அரசுக்கும், மக்களுக்கும் விழுப்புணர்வு தெளிவாக எடுத்துரைக்கும் திரு:ராமதாஸ் அவர்களுக்கு நன்றி.
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
06-ஆக-202018:59:44 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ராஜீவ் கொலைகாரர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் அமோனியம் நைட்ரேட்டை விடக் கொடியவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X