குன்றத்துார் :குன்றத்துார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுாரைச் சேர்ந்தவர் பாண்டிமுனி, 53. இவர், குன்றத்துார் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றினார்.இவருக்கு, 2017ல் பக்கவாதம் ஏற்பட்டது. அதன்பின், பணிக்கு வந்த பாண்டிமுனிக்கு, மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி முதல் வீட்டில் இருந்தார்.கடந்த மாதம், பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அப்போது, கொரோனா பரிசோதனையில், தொற்று உறுதி செய்யப்பட்டு, நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார்.