| தெரு வாசிகளுக்கு மூன்று வேளை உணவு Dinamalar
தெரு வாசிகளுக்கு மூன்று வேளை உணவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
01:09

கே.கே.நகர், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் குணசேகரன், தன் அறக்கட்டளை வாயிலாக, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டு, முன்னாள் கவுன்சிலர் எம்.குணசேகரன். இவர், 'ஸ்டார்' அறக்கட்டளை நிறுவனராக உள்ளார்.தன் அறக்கட்டளை வாயிலாக, 125 நாட்களாக, 1,500 பேருக்கு, கபசுர குடிநீர் வழங்கி வருகிறார்.மேலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து, 90 நாட்களுக்கு, சாலையோர வாசிகளுக்கு, தினமும் மூன்று வேளை உணவளித்துள்ளார்.தன் வார்டு முழுதும், லாரியில் கிருமி நாசினியும் தெளித்து வருகிறார். இது குறித்து, குணசேகரன் கூறியதாவது:ஸ்டார் அறக்கட்டளை, 2015ல் துவங்கப்பட்டது. பேரிடர் காலங்களில், மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். அறக்கட்டளை வாயிலாக, ஆண்டு தோறும், 50 குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி கட்டணம் செலுத்தி வருகிறோம்.தற்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கபசுர குடிநீருடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, 1,500 வேக வைத்த முட்டை, பச்சை பயிறு, சுண்டல், கீழாநெல்லி சாறு, துாதுவளை சூப் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.தினமும் காலை, 6:30 மணிக்கு, கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகர், விருகம்பாக்கம் காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பதுடன், கபசுர குடிநீரும் வழங்கி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X