வரைபடத்தில் இருந்து அழியும் அபாயத்தில் புத்தகரம் தாங்கல் ஏரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
01:12



தொடர் ஆக்கிரமிப்பில் சிக்கி வரும், புத்தகரம் தாங்கல் ஏரியை மீட்காவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில், முழுமையாக கபளீகரம் செய்யப்பட்டு, வரைபடத்தில் இருந்தே, இந்த ஏரி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை, மாதவரம் மண்டலத்தின், 24வது வார்டு, புத்தகரம், புறவழிச்சாலை அருகே, 42.36 ஏக்கர் பரப்பில் காணப்பட்டது, புத்தகரம் தாங்கல் ஏரி.15 ஆண்டுகளில், ஏரி மற்றும் அதன் நீர்வரத்து கால்வாய்களின் பெரும்பகுதி, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீட்டுமனைகளாக மாறின.இதற்கு, வருவாய்த் துறையினரின் உதவியுடன், அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள், போலி ஆவணங்கள் தயாரித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்றனர்.சென்னை - மதுரவாயல் புறவழிச்சாலையை ஒட்டி, சொந்த வீடு கிடைக்கிறது என்ற ஆசையில், உண்மையை அறியாத பலரும், 600 சதுர அடி இடத்தை, 3 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கினர். சிலர் முன் பணமாக, 2 லட்சம் ரூபாயும், மாத தவணையாக, மீதி பணத்தையும் கொடுத்து இடத்தை சொந்தமாக்கினர்.தொடர்ந்து, கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி, வீடுகளை கட்டினர். அவற்றுக்கான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உள்ளூர் அரசியல்வாதிகள் மூலம் கிடைத்தன.இந்நிலையில், 2016ல், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிப்பு குறித்து விசாரித்தது. அதில், நீர்நிலை ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டு, அறிக்கை அளிக்கப்பட்டது. அதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதே ஆண்டு, மார்ச், 3ம் தேதி, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, 5ம் தேதி, மாதவரம் வருவாய் துறையினர், ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. அன்று மாலையே, அங்கு வசித்தவர்கள் தரப்பில், நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் கருதி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.அதன்பின், சட்டசபை தேர்தல் காரணமாக, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, முழுமையாக கைவிடப்பட்டது. இந்நிலையில், 2017ல், சென்னை குடிநீர் வாரியம், ஏரியை ஆக்கிரமித்து, கழிவு நீர் அகற்றும் நிலையத்தை கட்டியது. இந்த செயல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இப்போது, அந்த ஏரி குட்டையாக சுருங்கி விட்டது.இந்நிலையில், மாதவரம், அம்பத்துார் சுற்றுவட்டாரங்களில் அகற்றப்படும் கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகள், வாகனங்கள் மூலம் ஏரிக்குள் கொட்டப்படுகின்றன.இந்நிலை மேலும் தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பாளர்களால், முழுமையாக கபளீகரம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீர்நிலை ஆர்வலர்கள் கூறியதாவது:15 ஆண்டுகளுக்கு முன், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவிய புத்தகரம் தாங்கல் ஏரி, வருவாய் துறை மற்றும் மாநகராட்சியின் அலட்சியத்தால், கழிவு நீர் குட்டையாக மாறிவிட்டது.அரசு துறைகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தாங்கல் ஏரியின் எல்லையை வரையறுத்து, கரை அமைக்க வேண்டும். அப்போது தான், இந்த ஏரி, மேலும் ஆக்கிரமிக்கப்படாமல் தடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொதுப்பணித் துறை அலட்சியம்!ஏரியை சுற்றி கரை அமைக்க, கடந்தாண்டு, அரசு நிதி ஒதுக்கியது. இதையடுத்து, டிசம்பரில், 7 லட்சம் ரூபாய் செலவில், பொதுப்பணித் துறை மூலம், அணுகு சாலையை ஒட்டி, ஆக்கிரமிப்பு வீடுகள் வரை, 250 அடி நீளத்திற்கு மட்டும், மண் கரை அமைக்கப்பட்டது. ஏரியின் மீதமுள்ள பகுதிகளில், கரை அமைக்கப்படவில்லை. மேலும், ஏரிக்குள், வளர்ந்த சீமை கருவேல மரங்களும், அங்கு கொட்டப்பட்ட கட்டட கழிவுகளும், இன்று வரை அகற்றப்படவில்லை. இதனால், புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X