| அடையாறு 'மியாவாக்கி' பகுதியில் தேனீ, பட்டாம்பூச்சி வரத்து துவக்கம் Dinamalar
அடையாறு 'மியாவாக்கி' பகுதியில் தேனீ, பட்டாம்பூச்சி வரத்து துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
01:12

அடையாறு, அடையாறில், 'மியாவாக்கி' அமைக்கப்பட்டுள்ள இடத்தில், தேனீ, பட்டாம்பூச்சிகள் வர துவங்கி உள்ளன.சென்னையை பசுமையாக்க, மாநகராட்சி, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அடையாறில், 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடத்தில், 'மியாவாக்கி' என்னும் அடர்வனம், ஜனவரியில் அமைக்கப்பட்டது.அதில், மரம், செடி, கொடி மற்றும் உயரமாக வளரும் மரங்கள் என, 39 வகையான, 2,200 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்று வகைகளுக்கு ஏற்ப, 2 அடி முதல், 20 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன.குறிப்பாக, கொய்யா, முருங்கை ஆகியவை மரமாக வளர்ந்து, காய்க்க துவங்கியுள்ளன. பெரும்பாலான மரம், செடிகளில், பூ பூத்துள்ளதால், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள் வர துவங்கி உள்ளன.குருவி, கிளி சார்ந்த சில பறவைகள், மரங்களில் அமர்ந்து ஓய்வு எடுக்கிறது. அவ்வப்போது மழை பெய்வதால், செடிகளை சுற்றி, சிறிய அளவில் குழி தோண்டி, உரம் போடும் பணி நடக்கிறது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஒரு சதுர மீட்டர் பரப்பளவில், பூ, செடி, மர வகையைச் சேர்ந்த, ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. அடுத்த ஆண்டு, மர வகைகள் உயரமாக வளர்ந்து, அடர்வனம் போல் காட்சியளிக்கும்.அப்போது, பறவைகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. காற்று மாசு குறையும். பசுமையாக காட்சி தரும். தற்போது, சுற்றி வளர்ந்துள்ள புல், புதர்களை அகற்றி, பராமரிப்பு பணி நடக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X