| ஊட்டி கோர்ட்டில் பெண் நக்சல் ஆஜர் Dinamalar
ஊட்டி கோர்ட்டில் பெண் நக்சல் ஆஜர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

07 ஆக
2020
01:24

ஊட்டி:ஊட்டி, கோர்ட்டில் பெண் நக்சல் ஆஜர்படுத்தப்பட்டார்.நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே, நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில், 2016ம் ஆண்டு ஏப்., 1ல், பெண் நக்சல் உட்பட ஏழு பேர் வந்து, தங்கள் இயக்கத்தில் சேரும்படி, கிராம மக்களிடம் பிரசாரம் செய்து, நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.இவ்வழக்கில், கஸ்டடி எடுத்து விசாரிக்க, கோவை சிறையில் உள்ள பெண் நக்சல், ஷோபாவை போலீசார், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். ஒரு நாள் கஸ்டடி வழங்கிய நீதிபதி வடமலை, இன்று மாலை, 3:00 மணிக்கு, மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.தொடர்ந்து, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஷோபாவை போலீசார் அழைத்து சென்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X