உலக யானைகள் தின விழா போட்டிகள்; மாணவர்களுக்கு அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
00:49

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் நடக்கிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் மற்றும் ஆரண்யா அறக்கட்டளை சார்பில், ஆக., 12 உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலம், ஓவியம், கட்டுரை போட்டிகள் நடக்கிறது.


ஓவியப்போட்டி, எல்.கே.ஜி.,முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தேசிய பாரம்பரிய விலங்கு யானை என்ற தலைப்பிலும், 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, காடுகள் மற்றும் யானைகள் என்ற தலைப்பிலும் நடக்கிறது.10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, வன சுற்றுச்சூழலின் பொறியாளர் யானை என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடக்கிறது.கட்டுரைப்போட்டி, 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, யானைகள் பாதுகாப்பின் அவசியம் என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, வனங்களின் பாதுகாப்பில் யானைகளின் பங்கு என்ற தலைப்பிலும் நடக்கிறது.


ஓவியம் மற்றும் கட்டுரைகள், aranyacharities@gmail.com என்ற முகவரியில், 11ம் தேதி, மாலை,, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.மேலும், விவரங்களுக்கு, ஆனைமலை புலிகள் காப்பகம், உதவி வனப்பாதுகாவலர் கணேஷ்ராம், 94425 27339; உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன், 70946 39223 ; ஆரண்யா அறக்கட்டளை செயலாளர் கார்த்திகேயன், 94430 39697 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர்க அன்வர்தீன், துணை இயக்குனர் திலீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X