| வெங்காய விதைகள் உற்பத்திக்கு அறிவுரை Dinamalar
வெங்காய விதைகள் உற்பத்திக்கு அறிவுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
00:49

உடுமலை;முறையான தொழில்நுட்பங்களை பின்பற்றினால், சின்ன வெங்காய சாகுபடிக்கு தேவையான விதைகளை விவசாயிகளே உற்பத்தி செய்யலாம்,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, வறட்சி காரணமாக, சின்னவெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், சாகுபடிக்கு தேவையான வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை விவசாயிகளுக்குஏற்பட்டுள்ளது.எனவே, தாங்களாகவே, விதை உற்பத்தி செய்து பயன்படுத்த பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, சாகுபடியில், குறிப்பிட்ட இடம் ஒதுக்கி, அச்செடிகள் பூக்கும் தருணம் வரை அறுவடை செய்வதில்லை.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:விதை உற்பத்திக்காக பராமரிக்கப்படும் வயல்களில், கலவன்களை நீக்கி விட வேண்டும். செடிகளின் உயரம், இலை மற்றும் பூங்கொத்துகளின் நிறம் அடிப்படையில், வயல்களில் எளிதாக கலவன்களை கண்டறியலாம். விதைகள் நன்கு முதிர்ந்த பின், அறுவடை செய்ய வேண்டும். வெங்காயத்தில் விதை அறுவடை தருணத்தில் உள்ளது போல, பூங்கொத்தில், 50 சதவீத கருப்பு விதைகள் வெளியில் தெரியும். அச்சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.விதை உற்பத்தி செய்யும், விவசாயிகள், விதை சான்றளிப்பு பெறலாம். விதையின் இனத்துாய்மை, தரம் குறித்து, சான்றளிப்பு பெறும் போது எளிதாக தெரிந்து கொள்ளலாம்,' இவ்வாறு, தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X