இலங்கை நபரை ஏமாற்றிய பெண்: திருப்பூரில் போலீசார் விசாரணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
01:40

திருப்பூர்: திருமணம் செய்வதாக கூறி, இலங்கை நபரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த, திருப்பூர் இளம்பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இலங்கையை சேர்ந்தவர் சஜித் காந்த், 34. இவர் லண்டனில் பணியாற்றுகிறார். மார்ச் மாதம், திருப்பூர், திரு.வி.க., நகரை சேர்ந்த 28 வயது பெண், சமூக வலைதளத்தில் அறிமுகமானார். மார்ச், 13ல், திருப்பூர் வந்த சஜித் காந்த், பெண்ணை சந்தித்து பேசினார்.அவருக்கு, இரண்டு சவரன் தங்க சங்கிலி அணிவித்து, மூன்று லட்சம் ரொக்கமும் கொடுத்தார். சில நாட்கள் திருப்பூரில் தங்கிய அவர், மீண்டும் லண்டனுக்கு சென்றார். அதன்பின், சஜித்காந்திடம் பல்வேறு காரணங்களை கூறி, அடிக்கடி பணம் கேட்டதால், அவரது வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பினார். தற்போது, அந்த பெண் தன்னை ஏமாற்றியதாக திருப்பூர் வடக்கு போலீசில், அவர் புகார் அளித்துள்ளார்.போலீசார் கூறியதாவது:சஜித்காந்திடம் திருமணம் ஆசை வார்த்தை கூறி, 28 லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகை பெற்று, அப்பெண் ஏமாற்றியுள்ளார். பெண்ணின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. பெரிய வீடுகளை வாடகைக்கு எடுத்து, 'கார்ப்பரேட்' ஆபீசில் வேலை செய்து வருவதாக தன்னை காட்டி கொண்டு, ஆன்லைனின் 'போட்டோ'களை பதிவு செய்வார். அதை நம்பி, அவரிடம் பேசுபவரிடம், பணம் பறித்து வந்தார். தலைமறைவாக உள்ள அவர் பிடிபட்டால், இன்னும் பல மோசடிகள் தெரிய வரலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
08-ஆக-202007:35:42 IST Report Abuse
natesa current days, ladies are doing lot of mistakes, but they are escaping, because lows favour for them.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X