குப்பையில் காசு பார்க்கும் நகராட்சி அதிகாரிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
19:28

சென்னை புறநகர் நகராட்சிகளில், குப்பையை உரமாக்கும் திட்டம், கிடப்பில் போடப்பட்டு, கிடங்குகளுக்கு குப்பையை கொண்டு சென்று குவிக்க, பல கோடி ரூபாய் செலவழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் வருவாய் ஈட்டவே, உரம் தயாரிப்பு திட்டத்தை முடக்குவதாக, புகார் எழுந்துள்ளது.சென்னை புறநகர் நகராட்சிகளில் சேகரமாகும் குப்பையை கையாள, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த, வேங்கடமங்கலத்தில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டது.தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகளின் குப்பை, அங்கு கொட்டப்பட்டு, உரமாக்கப்பட்டது.அப்பணியை, தனியார் நிறுவனம் செய்து வந்தது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையராக, தற்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் இருந்தபோது, நகராட்சிகளில் நிலவும் குப்பை பிரச்னைக்காக, பசுமை உரக்கிடங்கு திட்டத்தை கொண்டு வந்தார்.இதற்காக, வார்டுகளுக்கு ஏற்ப, சிறிய, பெரிய பசுமை உரக்கிடங்குகள் கட்டப்பட்டன. மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்கப்பட்டது.மக்காத குப்பை, சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. இதனால், வேங்கடமங்கலத்திற்கு குப்பை அனுப்புவது நிறுத்தப்பட்டு, மாதந்தோறும், அதற்கென செலவான பல லட்சம் ரூபாய் மிச்சமானது.சென்னை மாநகராட்சி கமிஷனராக, பிரகாஷ் இடமாற்றப்பட்ட பின், உரக்கிடங்கு திட்டத்தை செயல்படுத்த, பல நகராட்சிகள் மும்முரம் காட்டவில்லை.மாறாக, பழையபடி வேங்கடமங்கலத்திற்கு குப்பை எடுத்துச் செல்லும் பணிகளே நடந்தன. அங்கும், குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்காமல், தேக்கி வைக்க மட்டுமே, நகராட்சி நிர்வாகங்கள் முடிவு செய்தன.இதனால், அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்கள், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 'வேங்கடமங்கலத்தில், குப்பை பிரித்து கையாளுவதற்கு தேவையான உபகரணங்களை ஏற்படுத்திய பின், கொட்டுங்கள்' என, உத்தரவிட்டு, குப்பை கொட்ட தடை விதித்தது.இதனால், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் நகராட்சிகள், சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, பெருங்குடி குப்பை கிடங்கில், குப்பை கொட்டுகின்றன.இதற்காக, ஒவ்வொரு நகராட்சியாலும், தனித்தனியே ஒப்பந்தம் விடப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகை, அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' ஆக சென்றுள்ளது.அதேநேரம், அனகாபுத்துார், பூந்தமல்லி நகராட்சிகள், இப்பணிகளில், ஆரம்பத்தில் இருந்தது போலவே, தற்போதும், குப்பையில் உரம் தயாரித்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.இதனால், தாம்பரம், செம்பாக்கம், பம்மல், பல்லாவரம் நகராட்சிகளில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பசுமை உரக்கிடங்குகள், செயல்படாமல் வீணாக உள்ளன.இங்கு, பெயரளவிற்கு கணக்கு காட்ட மட்டுமே, உரம் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.குழு அமைக்குமா தீர்ப்பாயம்?தமிழகம் முழுதும், நகராட்சிகளில் உரம் தயாரிக்கும் பணிகள் விரிவுபடுத்தப்பட்ட பின், அதை, பசுமை தீர்ப்பாயத்தின், மாநில திடக்கழிவு திட்ட, கண்காணிப்பு குழு தலைவர், பி.ஜோதிமணி, சுழற்சி முறையில் ஆய்வு செய்து வந்தார்.அவர், ஆய்வு செய்ததால், அதிகாரிகளும் பயந்து பணி செய்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக, மாநிலம் முழுதும், திடக்கழிவு மேலாண்மை பிரச்னை, மீண்டும் தலைதுாக்கி உள்ளது.இதனால், பிரதமரின் கனவு திட்டமான, 'துாய்மை இந்தியா' திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி, மொத்தமாக வீணாகி வருகிறது. இதை தடுக்க, பசுமை தீர்ப்பாயம் உடனடியாக குழு அமைக்க வேண்டும்.செலவு எவ்வளவு? தாம்பரத்தில் கொரோனாவுக்கு முன், 100 டன் குப்பை கொரோனாவால், 70 டன்னாக குறைந்துள்ளது இதில், 25 முதல், 30 டன் மக்கும் குப்பை, 40 டன் மக்காத குப்பை இவை, கன்னடபாளையத்தில் கொட்டப்பட்டுள்ளன அங்கிருந்து, பெருங்குடிக்கு எடுத்துச் செல்ல, 3.50 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.


- -நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X