| பெண்ணை தாக்கியசகோதரர்கள் மீது வழக்கு Dinamalar
பெண்ணை தாக்கியசகோதரர்கள் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

08 ஆக
2020
23:11

செஞ்சி : முன் விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கிய சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.



செஞ்சி அடுத்த துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி வனிதா, 37; இவர் நிலத்திற்கு பக்கத்து நிலத்தின் சொந்தக்காரர் ராமகிருஷ்ணன் மகன் கிருஷ்ணராஜ், 23; இவரது உறவினரின் நிலத்தை வனிதா குடும்பத்தினர் வாங்கினர். இதனால் கிருஷ்ணராஜ் குடும்பத்துடன் விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி மாலை வனிதா நிலத்தில் இருந்தபோது, அங்கு வந்த கிருஷ்ணராஜ், அவரது அண்ணன் ஜானகிராமன், 25; ஆகியோர் சேர்ந்து வனிதாவையும், அவரது கணவர் வேல்முருகனையும் தாக்கிக்கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X