கோவையில் இதுவரை 4,692 பேர் 'டிஸ்சார்ஜ்': கொரோனா குணமடைவோர் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2020
02:17

கோவை:கோவையில் ஒரே நாளில், 149 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை, 4,692 ஆக உயர்ந்தது.கோவை ராமநாதபுரத்தில் 17 பேர், செல்வபுரம் - 8 காந்திமாநகர் - 6, குனியமுத்துார் மற்றும் உக்கடத்தில் தலா 5 பேர் உட்பட மொத்தம், 183 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த தொற்று எண்ணிக்கை 6,450 ஆக உயர்ந்தது.உக்கடம் ராமர் கோவில் வீதியை சேர்ந்த 67 மற்றும் 89 வயது முதியவர்கள், வீரகேரளத்தை சேர்ந்த 75 வயது முதியவர், குனியமுத்துார் பி.கே.புதுாரை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சூலுார் அண்ணாமலை நகரை சேர்ந்த 44 வயது ஆண் என, ஐந்து பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 115 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த, 149 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 4,692 ஆக உயர்ந்தது. தற்போது, 1,643 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.பணியாளர்களுக்கு பாராட்டுகோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 170 பணியாளர்கள், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அதிகமான நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதற்கு, டாக்டர்கள், நர்ஸ்களுக்கு அடுத்தபடியாக, மருத்துவ பணியாளர்கள் பங்கும் முக்கியமானது. இவர்களை கவுரவிக்கும் விதமாக வேஷ்டி, சட்டை, சேலை, 10 கிலோ காய்கறிகள் உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை, இ.எஸ்.ஐ., டீன் நிர்மலா, இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன மண்டல மேலாளர் தாமோதரன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X