செய்திகள் சில வரிகளில்...:திண்டுக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2020
03:39

இலவச முகக்கவசம்



திண்டுக்கல்: கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச முகக்கவசம் வழங்க உள்ளது. முதற்கட்டமாக, திண்டுக்கல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை சேர்ந்த 7 லட்சம் பேருக்கு தலா 2 முகக்கவசம் வழங்க உள்ளனர். இதற்காக, 14 லட்சம் முகக்கவசம் திருப்பூரில் தயாரிக்கும் பணி நடக்கிறது. தற்போது முகக்கவசத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.



பாதிப்பு அதிகரிப்பு



ஒட்டன்சத்திரம்: இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 108 ஆக உயர்ந்தது. மூன்று பேர் உயிரிழந்தனர். இதில் 93 பேர் குணமாகியுள்ளனர். இன்னும் 12 பேர் சிகிச்சையில் உள்ளனர்.





மாத்திரை வழங்கப்படுமா


திண்டுக்கல்: ரத்தசோகை எற்பட, குடலில் காணப்படும் புழுக்கள் முக்கிய காரணமாகும். அங்கன்வாடியில் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மி.கி., 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மி.கி., மாத்திரை வழங்கப்பட்டு வந்தது. கொரோனாவால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் மாத்திரை வழங்குவது தடைபட்டுள்ளது. எனவே, வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



வீணாகும் குடிநீர்



பழநி: நகரின் முக்கிய சாலைகளில் ரோடு விரிவாக்கப்பணிகள் நடக்கிறது. இதனால் சாலைகளில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதனால் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சாலை பணி முடிந்ததும், உடைந்த குடிநீர் குழாய்களை சரிசெய்து தர நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



கொசு தொல்லை



நிலக்கோட்டை: இப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன்கள், டி.எஸ்.பி., அலுவலகம் முன்பாக சாக்கடை கட்டப்பட்டுள்ளது. இந்த சாக்கடையில் இருந்து செல்லும் கழிவுநீர் பெரிய கால்வாயில் சேரும் இடம் மேடாக அமைந்துள்ளது. ஸ்டேஷன் முன்பாக கழிவு நீர் தேங்குவதால் கொசு தொல்லை உள்ளது. எனவே, சாக்கடையை சரிசெய்ய பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X