இரு போக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2020
01:08

மதுரை, பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இரு போக பாசன பகுதிகளுக்கு ஆக., 21 பெரியாறு அணை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் நீர்மட்டம் 132 அடியை கடந்து விட்டது. அணையில் 4500 மில்லியன் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் உள்ளது. இந்தளவுக்கு தண்ணீர் இருந்தால் இரு போக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. வழக்கமாக இரு போகத்திற்கு ஜூனில் திறக்கப்படும் தண்ணீர் சில ஆண்டுகளாக மழையின்றி தாமதமாக திறக்கப்பட்டது.இந்தாண்டு பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் தண்ணீர் திறக்க வேண்டும் என பெரியாறு பாசன திட்ட குழு விவசாயிகள் முருகன், திருப்பதி, தர்மராஜ், அருள்பிரகாசம், காரணம் ஆகியோர் டி.ஆர்.ஓ., செல்வராஜ், பொதுப்பணித்துறை பெரியாறு வைகை நீர்வளஆதார செயற்பொறியாளர் சுகுமாறனிடம் மனு அளித்தனர்.மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டத்தை கவனித்து வருகிறோம். நீர் பிடிப்பு பகுதிகளில் மழைபொழிவு இருப்பதால் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. நீர் இருப்பு குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக., 21க்கு பிறகு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. ஆனால் அரசு முடிவு செய்து அறிவிக்கும், என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X