| வழக்கறிஞரை லாக்கப்பில் தள்ள முயற்சி Dinamalar
வழக்கறிஞரை லாக்கப்பில் தள்ள முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
07:19

செஞ்சி : செஞ்சியில் வழக்கு விசாரணைக்கு வந்த வழக்கறிஞரை லாக்கப்பிற்குள் தள்ள முயற்சித்த இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் டி.எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச்சேர்ந்தவர் கலியமூர்த்தி. வழக்கறிஞர். பா.ம.க., சட்டப்பாதுகாப்பு குழு மாநில துணை தலைவர். இவர் நேற்று வழக்கு விசாரணைக்காக செஞ்சி போலீஸ் நிலையம் வந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் குமரைய்யா, கலியமூர்த்தி இடையே வழக்குப் பதிவு செய்வது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இன்ஸ்பெக்டர் குமரைய்யா , கலியமூர்த்தியின் மொபைல் போனை பறித்து, லாக்கப் வரை தள்ளி சென்றார். இவர் மீதும் வழக்குப் போடுங்கள் என சப் இன்ஸ்பெக்டர்களிடம் கூறியுள்ளார்.



சக போலீசார், இன்ஸ்பெக்டர் மற்றும் வழக்கறிஞரை சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த செஞ்சி அட்வகேட் அசோசியேஷன் தலைவர் சுதாகர், பார் அசோசியேஷன் தலைவர் இளஞ்செழியன், மூத்த வழக்கறிஞர்கள் ஆத்மலிங்கம், ராஜாராம், வெங்கடேசன், ராஜேந்திரன், ஏழுமலை பா.ம.க., மாவட்ட செயலர் கணல் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலர் மணிமாறன் மற்றும் வழக்கறிஞர்கள், பா.ம.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர். வழக்கறிஞர்கள் டி.எஸ்.பி., ராஜனை சந்தித்து இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.


புகாரை பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி., ராஜன், இது குறித்து தகவல் கிடைத்தது. எஸ்.பி., உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் குமரைய்யா விழுப்புரம் அனுப்பி வைக்கப்பட்டார். புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் ' என உறுதியளித்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X