வெறிநாய் கடித்து 15 பேர் படுகாயம்: மேல் சிகிச்சைக்கு வழியின்றி அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
09:55

நாமக்கல்: தொடர்ந்து வெறி நாய்களால் கடிபடும் பொட்டிரெட்டிப்பட்டி பகுதி மக்கள், பஸ் வசதி இல்லாததால், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.


சேந்தமங்கலம் தாலுக்கா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. அதில், ஆறாவது வார்டு அருந்ததியர் தெரு, அதன் சுற்றுப்பகுதியில், 40க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில் ஒரு சில நாய்கள் வெறி பிடித்து பொதுமக்களை கடித்து குதறி வருகின்றன. இது வரை, 15 பேருக்கு மேல் வெறி நாயால் கடிபட்டுள்ளனர். நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த தவமணி, 55, அமிர்தம், 72, அமுதா, 38, துளசி, 57, செல்லம், 52, மூக்கன் 50 உள்ளிட்ட, எட்டு பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களை அப்பகுதியினர், எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, தொடர்ந்து மூன்று நான்கு முறை தடுப்பூசி போடப்பட வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஊரடங்கால், பஸ் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொட்டிரெட்டிபட்டி அரசு துணை சுகாதார நிலையத்தில், மருத்துவசிகிச்சை மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்துதர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X