தி.மு.க.,வினருக்கு மட்டும் டெண்டர் படிவம் வழங்கிய மேலாளர் :அதிகாரிகள் ஆய்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
01:03


உசிலம்பட்டி,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் பணிகள் செய்வதற்கான டெண்டர் படிவம் தி.மு.க.,வினருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ஒப்பந்தக்காரர்கள் தகராறில் ஈடுபட்டனர்.13 ஊராட்சி கவுன்சிலர்களை கொண்ட இந்த ஒன்றியத்தின் தலைவராக தி.மு.க., ரஞ்சனி, துணைத்தலைவராக அ.ம.மு.க., பாண்டி மற்றும் தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த 5 கவுன்சிலர்களும், 5 அ.தி.மு.க., கவுன்சிலர்கள், ஒரு சுயேட்சை உள்ளனர். ஜூலை 7 கவுன்சில் கூட்டத்தில் திம்மநத்தம், கீரிபட்டி, சீமானுாத்து, தொட்டப்பநாயக்கனுார், நக்கலப்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, வகுரணி, எருமார்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுாரில் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் 18 பணிகள் நடத்த தீர்மானம் நிறைவேற்றினர்.இதற்கான டெண்டர் நேற்று உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கோரப்பட்டது. காலையில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 'தங்கள் வார்டுகளில் எந்த பணியும் ஒதுக்கவில்லை. தி.மு.க., கூட்டணி கவுன்சில் வார்டுகளில் மட்டும் பணிகள் நடத்த தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எனவே டெண்டரை ரத்து செய்ய வேண்டும்' என கமிஷனர் ஜெயராமனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாலை 4.00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய மேலாளர் சோலைகுரும்பன் தி.மு.க.,வினருக்கு மட்டும் டெண்டர் படிவங்கள் வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துஅ.தி.மு.க., கவுன்சிலர்களும், ஒப்பந்தக்காரர்களும் தகராறில் ஈடுபட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில் போலீசார் சமரசம் செய்தனர்.பின்னர் மேலாளரிடம் டெண்டரை ஒத்தி வைக்க வேண்டும் என அ.தி.மு.க.,வினர் மனு கொடுத்தனர். சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., ஒப்பந்தகாரர்கள் தொட்டப்பநாயக்கனுார் போத்திராஜா, கனக ராஜ் உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தனர். அதில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பாண்டி, தி.மு.க., கவுன்சிலர் துரைப்பாண்டி, அ.ம.மு.க, கவுன்சிலர் அலெக்ஸ்பாண்டி,மதன், முத்துமணி மற்றும் 10 பேர் தங்களை தரக்குறைவாக பேசி, தாக்கியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்கள்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X