| அதிக முதலீடு தேவையில்லை 'உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!' Dinamalar
அதிக முதலீடு தேவையில்லை 'உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!'
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

13 ஆக
2020
08:33
பதிவு செய்த நாள்
ஆக 13,2020 08:23

திருப்பூர்:அதிக முதலீடு தேவையில்லை; கடின உழைப்பை காணிக்கையாக்கினால், எளிதாக வெற்றிபெறலாம்; திருப்பூருக்கு, சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டேவிட்.


திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கும் 'வால்ரஸ்' நிர்வாக இயக்குனர் டேவிட் கூறியதாவது:கொரோனா பாதிப்பு விலகி வருகின்றன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வர துவங்கி விட்டன.துணி வர்த்தகமும், வேகமாக இயல்புக்கு திரும்பிவருகிறது.இது மிகவும் முக்கியமான தருணம். முதலீடுகள் இனி பயன்தராது. கடினமாக உழைக்க வேண்டும். குறைந்த முதலீடு, அதிக உழைப்பை வழங்க தயாராக உள்ளோர், மிக எளிதாக வெற்றிபெற முடியும்.


ஆடை உற்பத்தி துறையில், புதிய தொழில்முனைவோரை உருவாக்குவது; குறு, சிறு தொழில்முனைவோரை வளர்ச்சி பெறச்செய்வதற்காக, எங்கள் வால்ரஸ் நிறுவனம் மூலம், புதிய திட்டத்தை செயல்படுத்துகிறோம்.குறு, சிறு நிறுவனத்தினர், எங்களிடம் துணி கொள்முதல் செய்து, ஆடை தயாரித்து, அவற்றை எங்களிடமே விற்பனை செய்யலாம். உற்பத்தியாளர்களுக்கு, சீரான லாபம் வழங்கி, ஆடைகளை கொள்முதல் செய்கிறோம்; அவற்றை, வால்ரஸ் நிறுவனம், வேறு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும்.


தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஜவுளி வர்த்தக நிறுவனங்கள், வெளிமாநிலங்களில் ஆடை கொள்முதல் செய்ய முடியாமல் தவிக்கின்றன. இந்த சூழலை, குறு, சிறு ஆடை உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.உள்நாட்டு சந்தையிலும், செயற்கை இழை ஆடை தேவை அதிகரித்துள்ளது. ஓவன் பேன்ட், சர்ட்டுகளைவிட, பின்னல் துணியில் தயாரிக்கப்படும் பேன்ட், சர்ட் ரகங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரு கிறது. எனவே, திருப்பூர் பின்னலாடை துறைக்கு, மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு, காத்திருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X