போலீஸ் ஸ்டேஷன் கட்டுமானம் இழுபறியால் நீடிக்கும் குழப்பம் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போலீஸ் ஸ்டேஷன் கட்டுமானம் இழுபறியால் நீடிக்கும் குழப்பம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
09:12

அவிநாசி:திருமுருகன்பூண்டி போலீஸ் ஸ்டேஷன் கட்ட மாற்றிடம் தேர்வு செய்யப்பட்டும், கட்டுமான பணி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அவிநாசி திருமுருகன்பூண்டியில், கடந்தாண்டு, புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டு, அங்குள்ள தற்காலிக கட்டடத்தில், செயல்படுகிறது. எனவே, ஸ்டேஷனுக்கு கட்டடம் கட்ட, ராக்கியாபாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.இதற்கு அப்பகுதி மக்கள்,' பாவடிக்காக நெசவாளர்களும் பயன்படுத்தி வந்தனர். பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், நெசவுத் தொழிலில் மேம்படும் போது நிலம் பயன்பாட்டுக்கு வரும். பொங்காளியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது,' என எதிர்ப்பு தெரிவித்தனர்.ஆனால், மற்றொரு தரப்பினர், 'இந்த இடம் திருமுருகன்பூண்டியின் மைய பகுதியாக இருப்பதால், அங்கு போலீஸ் ஸ்டேஷன் கட்டவேண்டும்' என வற்புறுத்தினர்.இதுதொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் பேச்சு நடந்தது. வருவாய் துறையினர் கூறுகையில், 'விதிமுறைக்கு உட்பட்டு போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதில் எந்த சிக்கலும் இல்லை என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்," என்றனர்.இருப்பினும், இந்நடவடிக்கை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X