| மரக்கன்று வழங்க Dinamalar
மரக்கன்று வழங்க
Advertisement
 

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
09:13

திருப்பூர்:வேளாண் உற்பத்தியை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதில், பனை மரங்களில் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவைகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில், விவசாயிகளுக்கு இலவசமாக பனை விதை வழங்க, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.ஒரு எக்டர் மானாவரி நிலத்துக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கை பனைமர விதைகளும், எக்டருக்கு, குறைந்த தொகையில், வாகை, தேக்கு, புளி, வேம்பு, இலுப்பை, மகாகனி, ஈட்டி போன்ற பயன்தரும் மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு, அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.அவ்வகையில், நடப்பாண்டு, விரைந்து, மரகன்றுகள் மற்றும் பனை விதைகளை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னளர். அவர்கள் கூறுகையில், 'வறட்சி மிகுந்த மானாவாரி பகுதிகளில் அதிகளவில் மரங்கள் வளர்க்க ஊக்குவிக்கப்படுகிறது.தற்போது, பரவலாக மழை பொழிவு மற்றும் பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்கப் பெறுவதால், விரைந்து மரக்கன்று மற்றும் பனை விதைகளையும் வழங்க வேண்டும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X