600 பேருடன் அ.தி.மு.க., கூட்டம்: ஊரடங்கு உத்தரவு மீறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2020
09:14

திருப்பூர்:கொரோனா பரவும் அபாயத்தை மறந்து, 600க்கும் மேற்பட்டோரை அழைத்து, அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஊரடங்கு உத்தரவு மீறப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பொது இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடி நிற்கக்கூடாது. விதிமுறைகளை மீறி, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், 600க்கும் அதிகமானவர்களை அழைத்து, பொதுக்கூட்டம் போல் ஆலோசனை நடத்தியுள்ளனர்.கூட்டம் நடந்த இடத்தில், அனைவரும் நெருக்கியடித்து கொண்டு அமர்ந்தனர். இதுதவிர, கைகழுவ, 'சானிடைசர்' என எந்த ஏற்பாடும் இல்லை. கட்சி அலுவலகத்தில் இவ்வளவு கூட்டம் சேர்த்ததை, வருவாய்த்துறையினரும், போலீசாரும் ஏன் கண்டுகொள்ளவில்லை என, கேள்வி எழுப்பிய பொதுமக்கள், 'ஆளுங்கட்சியினருக்கு கொரோனா வராதா?' என்றும் ஆவேசப்பட்டனர்.மாவட்ட செயலாளர் ஆனந்தன் கூறுகையில், ''நிர்வாகிகளை மட்டும் அழைத்திருந்தோம்; பல்வேறு பகுதிகளில் இருந்து அனைவரும் வந்து விட்டனர். அதன்பின், வெளியே காத்திருக்குமாறு அனுப்பி விட்டோம். முக்கிய நிர்வாகிகளை மட்டும் வைத்து கூட்டம் நடத்தினோம்,'' என்றார்.இதுவரை இல்லாத அளவுக்கு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், 80 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இச்சூழலில், ஆளுங்கட்சியினர் இப்படி கூட்டத்தை கூட்டியது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X