சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் : கடன் வழங்குவதில் சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
00:59

கோவை:சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய அரசு அறிவித்த ரூ.10 ஆயிரம் கடனுதவிக்கு விண்ணப்பிப்பதில், சிக்கல் தொடர்கிறது.கோவை நகரில், அடையாள அட்டை வழங்கப்பட்ட, 6,169 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். ஊரடங்கு சமயத்தில் வியாபாரம் செய்ய முடியாததால், தமிழக அரசு சார்பில், 1,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.


இவ்வியாபாரிகள் மீண்டும் தொழில் துவங்க வசதியாக, வங்கிகள் மூலம், 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது; இப்பணியை, மாநகராட்சி ஒருங்கிணைக்க அறிவுறுத்தியது. வியாபாரிகளால், 'ஆன்-லைன்' முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாததால், மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.வங்கி கணக்குடன், ஆதார் எண் மற்றும் மொபைல் போன் எண்கள் இணைக்காமல் இருப்பது, முகவரி மாறியிருப்பது ஆகிய காரணங்களால், விண்ணப்பிக்க முடியாத சூழல் இருப்பது, மாநகராட்சி கமிஷனரின் ஆய்வில் தெரியவந்தது.இதையடுத்து, வியாபாரிகளை அலைக்கழிக்க வைக்காமல், அந்தந்த பள்ளிகளிலேயே ஆதார் திருத்தம் செய்ய முடியுமா என, மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து, முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.


வயிற்றுப் பிழைப்புக்காக...கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், வ.உ.சி., பூங்கா, நேரு ஸ்டேடியம், டாடாபாத், ஆர்.எஸ்.புரம், சாயிபாபா காலனி, சுந்தராபுரம், சிங்காநல்லுார், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோர வியாபாரிகள் இருந்தனர். கடந்த நான்கு மாதங்களாக கடை நடத்த முடியாத சூழலால், பொருளாதார இழப்பை ஈடுகட்ட, மாற்றுத்தொழிலுக்கு சென்றிருக்கின்றனர். இவர்களை போல், உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் தொழில் துவங்க உதவும் வகையில், கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கின்றனர் வியாபாரிகள்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X