உதவித்தொகை வராவிட்டால் வேளாண் துறையை அணுகலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
01:29

பொள்ளாச்சி:மத்திய அரசின், விவசாயிகள் உதவித்தொகை வங்கிக் கணக்குக்கு வராவிட்டால், வேளாண் துறையை அணுகலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் முக்கிய திட்டமாக, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் உள்ளது. இதில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, ஆறாயிரம் ரூபாய் உதவித்தொகையாக வங்கிக் கணக்கு வாயிலாக வழங்கப்படுகிறது. மூன்று தவணையாக தலா, இரண்டாயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன், மத்திய அரசு திட்டத்தில் இணைந்துள்ள, 8.5 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்குக்கு உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விண்ணப்பித்த விவசாயிகள், தங்களுக்கு உதவித்தொகை வரவில்லை, என கவலை தெரிவிக்கின்றனர்.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பாமல் விட்டது, வங்கிக் கணக்கு, ஆதார் விபரங்களில் உள்ள வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.இதனை, www.pmkisan.gov.in வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று சரி செய்துகொள்ள முடியும். பெயர் தவறாக இருந்தால் மட்டுமே, அதை ஆன்லைனில் சரிசெய்ய முடியும். வேறு ஏதேனும் தவறு இருந்தால், வேளாண்மைத் துறையை அணுகவும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X