கமலா ஹாரிசின் வெற்றிக்கு உதவிய சென்னை வரசித்தி விநாயகர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

14 ஆக
2020
18:03
பதிவு செய்த நாள்
ஆக 14,2020 18:01

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், முந்தைய எம்.பி., மற்றும் தலைமை வழக்கறிஞர் தேர்தல்களின் போது தன் வெற்றிக்காக, சென்னையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடைக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.




அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அறிவித்துள்ளார். இவருக்கும் சென்னைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. முக்கியமாக, 'கமலா ஹாரிசின் மனதுக்கு நெருக்கமான இடம், பெசன்ட் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில்' என, அவரது சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார்.



இக்கோவில் கட்டுமான பணியின் போது, அதன் கமிட்டி உறுப்பினராக கமலா ஹாரிசின் தாய் ஷியாமலா கோபாலன் இருந்துள்ளார். 2011ல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் தலைமை வழக்கறிஞராக போட்டியிட்ட போது, பெசன்ட் நகரிலுள்ள தனது சித்தியை தொடர்பு கொண்டு, 'எனக்காக வேண்டிக்கொண்டு வரசித்தி விநாயகர் கோவிலில் தேங்காய் உடையுங்கள்' எனக் கூறியுள்ளார். அவரும் 108 தேங்காய் உடைத்துள்ளார். வெற்றிக்கு பின் தன் சித்தியிடம் பேசிய அவர், 'உங்கள் வேண்டுதல் வேலை செய்துவிட்டது. நீங்கள் உடைத்த ஒவ்வொரு தேங்காய்க்கும் எனக்கு ஆயிரம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன' என, மன மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.



இதேபோல், 2016ல் ஜனநாயக கட்சி சார்பில் எம்.பி.,யாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அப்போதும் அவரது சித்தி 108 தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டுள்ளார். அந்த தேர்தலிலும் அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது உலகின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பதவிகளில் ஒன்றான அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா போட்டியிடுகிறார். 'பெசன்ட் நகரிலிருந்து குடிபெயர்ந்துவிட்டாலும், அவருக்காக வந்து மீண்டும் 108 தேங்காய்களை உடைத்து வழிபடுவேன்' என, அவரது சித்தி சரளா கோபாலன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஆக-202011:56:50 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பெயருக்குப் பின்னால் ஹாரிஸ் என்ற பெயர் இருந்தால் கூட ஹிந்துதான் என்று தெரிந்துகொண்டேன்
Rate this:
மணி - புதுகை,இந்தியா
17-ஆக-202007:58:29 IST Report Abuse
மணிஆனா பீப் சாப்பிடுற வீடியோ?...
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-202009:21:55 IST Report Abuse
Sampath Kumar ஜெய் ஸ்ரீ ராம் என்று சோலா முடியவில்லை ஏன் ? அங்கு தான் இருக்கு சங்கதி
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஆக-202005:02:15 IST Report Abuse
meenakshisundaram வீரமணி &கோ கவனிக்கவும் .'துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு செல்ல அறிவுரை கூறவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X