| பூ வியாபாரிகளுக்கு மாற்று இடம் நாளை மறுதினம் முதல் கடை திறப்பு Dinamalar
பூ வியாபாரிகளுக்கு மாற்று இடம் நாளை மறுதினம் முதல் கடை திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
00:58

சென்னை :கோயம்பேடு பூ வியாபாரிகளுக்கு, மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு, நாளை மறு தினம் முதல், கடைகள் திறக்கப்பட உள்ளன.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே மாதம் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. காய்கறி வியாபாரிகளுக்கு திருமழிசையிலும், பழ வியாபாரிகளுக்கு மாதவரத்திலும், தற்காலிக மார்க்கெட் திறக்கப்பட்டு உள்ளது.இங்கு, மொத்த விற்பனை மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது. பூ வியாபாரிகளுக்கு, மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால், மதுரவாயல், அண்ணாநகர், மாதவரம் ரவுண்டானா என, பல இடங்களில், அவர்கள் பூ விற்பனை செய்து வருகின்றனர். தங்களுக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என, பூ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று, தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரத்தில், தற்காலிக பூ மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான, 4.64 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு, நாளை மறு தினம் முதல், கடைகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக, கோயம்பேடில், பூ மொத்த வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு, வானகரத்தில் கடை ஒதுக்கீடு வழங்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X