| குடிநீர் ஏரிகளின் இருப்பு4.46 டி.எம்.சி.,யாக சரிவு Dinamalar
குடிநீர் ஏரிகளின் இருப்பு4.46 டி.எம்.சி.,யாக சரிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
00:59

சென்னை, சென்னைக்கு குடிநீர் வழங்கும் திருவள்ளூர் மாவட்ட ஏரிகளில், நீர் கையிருப்பு, 4.46 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி., சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை, 1 டி.எம்.சி.,க்கு மேல் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், நான்கு ஏரிகளிலும் சேர்த்து, தற்போது நீர் இருப்பு, 4.46 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக, புழல் ஏரியில், 2.47 டி.எம்.சி., செம்பரம்பாக்கத்தில், 1.76 டி.எம்.சி., இருப்பு உள்ளது. பூண்டியில், 0.12 டி.எம்.சி.,யும், சோழவரத்தில், 0.09 டி.எம்.சி.,யும் எஞ்சியுள்ளது. இந்த நீரை வைத்து டிசம்பர் வரை, சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். அக்டோபரில், வடகிழக்கு பருவ மழை துவங்குவதால், நான்கு ஏரிகளிலும், நீர் இருப்பு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை என்பதால், குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X