தொழிலை மேம்படுத்த கைதூக்கி விடுங்கள்! தொழில் அமைப்புகள் அரசுக்கு வேண்டுகோள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 ஆக
2020
01:37
பதிவு செய்த நாள்
ஆக 15,2020 01:35

கோவை:'தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து தொழில் செய்ய, விதிமுறைகளை தளர்த்த வேண்டும்; கடன் தவணை செலுத்த, காலநீட்டிப்பு வழங்க வேண்டும்' என, கோவை தொழில் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது குறித்து, கோவையில் நேற்று, கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் நாராயணசாமி, லகு உத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர், நிருபர்களிடம் கூறியதாவது:வைரஸ் தொற்றுடன் வாழ பழகி விட்டோம். இனி, எப்படி மீள்வது என்பது பற்றி, தொழில் நிறுவனங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்து வருகின்றன.


தொழிற்சாலைகள் செயல் பட துவங்கியுள்ள சூழ்நிலையில், கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை, வரும் மார்ச் 2021 வரை நீட்டிக்க வேண்டும்.தவணை செலுத்தும் காலத்தில், ஏற்படும் வட்டிக்கும் வட்டி செலுத்தும் நிலையை மாற்ற வேண்டும். கடன் பெறாதவர்களுக்கு, மீண்டும் கடனுதவி வழங்க வேண்டும்.அரசு அறிவித்த 3 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியில், இதுவரை 1 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீதமுள்ள உதவியையும் பெறும் வகையில், வங்கிகளின் விதிமுறைகளில் தளர்வு வேண்டும்.


கடன் மறுசீரமைப்பால், பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயனடையும் நிலை உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இதனால் பயனில்லை. தொழில்நிறுவனங்கள் உற்பத்தியை துவக்கினாலும், நுகர்வு குறைவாகவே உள்ளது. இதை மாற்ற குறுகிய கால அளவிற்கு ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். பொருட்கள் விலை குறையும்போது, பொதுமக்களின் நுகர்வு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.வெளிமாவட்டத்திலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வரும் தொழிலாளர்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் இ - பாஸ் வழங்க வேண்டும்.


பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், தொழில் நிமித்தமாக வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு செல்ல நிரந்தர பாஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஞாயிறு ஊரடங்கில் தொழில் நிறுவனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டத்தில், பவுண்டரி மேன் நிறுவனத்தின் தலைவர் பால்ராஜ், சீமா தலைவர் கிருஷ்ணக்குமார், கோப்மா தலைவர் மணிராஜ், காட்மா தலைவர் மகேஷ்குமார், கோவை தொழில் துறை கட்டமைப்பு சங்கத்தின் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வெளிமாநில தொழிலாளருக்குசிறப்பு ரயில் விட வேண்டும்.


வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில் விடப்பட்டதை போன்று, மீண்டும் தொழில் செய்ய வர விரும்பும் தொழிலாளர்களுக்கு, சிறப்பு ரயில் இயக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தி மீண்டும் பணியமர்த்தவும், அரசு உதவ வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pollachipodiyan - pollachi,COIMBATORE.,இந்தியா
15-ஆக-202012:22:58 IST Report Abuse
pollachipodiyan நம்மூர் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடுத்து கைதூக்கி விடுங்கண்ணா.. நான் ஒரு எச் ஆர் எம் பி எ. சும்மாதான் இருக்கிறேன். உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்காம, சிறப்பு ரயில் விடுங்கனு சொல்றது கொஞ்சம் ஓவருங்கண்ணா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X