துவக்கம்! புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் .... அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 ஆக
2020
07:14
பதிவு செய்த நாள்
ஆக 15,2020 06:30

புதுச்சேரி : சின்ன சுப்ராயப்பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வசிக்கும் மக்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்குவதற்காக முன்னுரிமை அடையாள அட்டை வழங்கப்பட்டது.


சின்ன சுப்ராயப்பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளாக 110 ஏழை குடும்பத்தினர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த இடத்தில் பட்டா அல்லது வீடு கட்டுவதற்கான மானியம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.இதன் காரணமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சின்ன சுப்ராயப்பிள்ளை அறக்கட்டளையின் அனுமதியை பெற்று, குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வான சிவா ஏற்பாடு செய்து வருகிறார்.



அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தாமாக முன்வந்து அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அவர்களுக்கு கட்டப்பட உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை பெறுவதற்கான முன்னுரிமை அடையாள அட்டை குடிசை மாற்று வாரியம் மூலம் நேற்று வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைவர் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கினர்.



புதுச்சேரி தலைமை நகர வடிவமைப்பாளர் சத்தியமூர்த்தி, துணை நகர வடிவமைப்பாளர் விஜய நேரு, குடிசை மாற்று வாரிய முதன்மை செயல் அலுவர் லட்சுமணன், உதவி பொறியாளர்கள் ரவிச்சந்திரன், அனில்குமார், ஊர் பிரமுகர்கள் சக்திவேல், தர்மன், சசிகுமார், அகிலன், தட்சணா, கந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X