தேக்கம்! விநாயகர் சதுர்த்திக்கு தயாரான சிலைகள்...வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
06:39

கடலுார் : கொரோனாவால் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடலுார் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் வாங்க ஆளில்லாமல் தேக்கமடைந்து, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.



விநாயகர் சதுர்த்தியொட்டி, கடலுார் மாவட்டத்தில் கடலுார் முதுநகர் மணவெளி, வண்டிப் பாளையம், பண்ருட்டி அரசூர், வையாபுரிபட்டினம், பையூர், பேரங்கியூர் உட்பட பல கிராமங்களில், 5 அடி முதல் 15 அடி உயரம் வரையுள்ள சிலைகள் தயார் செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, பெங்களூரு, மும்பை, டில்லி என, பல மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். தேவை அதிகரிப்பதால், ஆண்டு தோறும் ஜனவரி மாதத்திலேயே சிலைகள் செய்யும் தொழிலை துவக்கி விடுகின்றனர்.



இந்த ஆண்டு வரும் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் இத்தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள், கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் செலவில் 10 அடி உயரம் வரையுள்ள சிலைகளை செய்தனர்.கொரோனா தொற்று அதிகரிப்பதால், பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுதல், வழிபடுதல், சிலையை கரைத்தல் தடை செய்யப்பட்டு உள்ளது. பொது இடங்களுக்கான சிலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என, சிலை செய்வோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.



இதனால் விநாயகர் சதுர்த்திக்காக, கடலுார் மாவட்டத்தில் இத்தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள், தாங்கள் செய்த சிலைகள் தேக்கமடைந்ததால், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.விநாயகர் சிலைகள் விற்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க கோரி கடந்த 11ம் தேதி, கடலுாரில் பொம்மை தயாரிப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-202001:47:50 IST Report Abuse
Ganesan Madurai அரசு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்
Rate this:
Cancel
17-ஆக-202001:47:43 IST Report Abuse
Ganesan Madurai அரசு கட்டாயம் உதவி செய்ய வேண்டும்
Rate this:
Cancel
natesa -  ( Posted via: Dinamalar Android App )
16-ஆக-202005:56:07 IST Report Abuse
natesa this celabration only politicians drama
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X