அம்மா உணவக ஊழியர் உடல் 40 மணி நேரத்துக்கு பின் தகனம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
06:55

நெல்லிக்குப்பம் : அம்மா உணவக ஊழியர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இறந்து, 40 மணி நேரத்துக்கு பிறகு கொரோனா உறுதியானதால் அவரது உடலை துாய்மை பணியாளர்கள் எரியூட்டினர்.



கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அ.தி.மு.க., பிரமுகர் சண்முகம் மனைவி செந்தமிழ்,36; நகராட்சி அம்மா உணவகத்தில் பணிபுரிந்தார். இவருக்கு 12ம் தேதி சர்க்கரை ரத்த அழுத்தம் அதிகமானதால், கடலுார் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டார். அன்று மதியம் கொரோனா பரிசோதனை செய்தனர். உடல்நலம் மிகவும் பாதித்த செந்தமிழ் அன்று மாலை இறந்தார்.கொரோனா பரிசோதனை முடிவு வந்தால் தான் உடலை தருவது பற்றி முடிவு செய்யப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பரிசோதனை செய்து 40 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை கொரோனா உறுதியானதாக கூறினர்.



பின்னர், துாய்மை பணியாளர்கள் அவரது உடலை கடலுார் கம்மியம்பேட்டையில் உள்ள மயானத்தில் உறவினர்கள் முன்னிலையில் எரியூட்டினர்.செந்தமிழின் உறவினர்கள் கூறுகையில், 'கொரோனா பரிசோதனை முடிவு வர 40 மணி நேரமானது. அதுவரை வேதனையுடன் நாங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா நோய் இல்லாதவர்கள் கூட பரிசோதனை முடிவு வருவதற்குள், மன அழுத்தம் காரணமாக, பயத்திலேயே உடல்நிலை பாதிக்கின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X