அரசு மணல் குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
07:01

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அரசு மணல் குவாரிக்கு பொது மக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிகாரிகளின் சமரச பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.



கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம், கோபாலபுரம் கிராமங்களில், மணிமுக்தாற்றில், அரசு மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர், கிராம மக்களுடன் இணைந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விருத்தாசலம் தாசில்தார் (பொறுப்பு) செல்வமணி தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், பா.ம.க., மாநில நிர்வாகிகள் அசோக்குமார், முத்து கிருஷ்ணன், மாவட்ட செயலர் கார்த்திகேயன், தி.மு.க., ஒன்றிய செயலர் ராயர், வி.சி., நிர்வாகிகள் ராஜீ, அருள் உட்பட பலர் பங்கேற்றனர்.



அப்போது, என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணியால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்த நிலையில், மணல் குவாரி அமைப்பதால் 20 கிராமங்களின் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்படுவதுடன் வாழ்வாதாரம் பாதிக்கும். கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும். அதுவரை மணல் குவாரியை திறக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.அதற்கு, அரசின் நேரடி கட்டுப்பாட்டில் குவாரி இயங்குவதால், முறைகேடுகள் நடக்காது. ஐ.ஐ.டி., பேராசிரியர் மோகன் தலைமையிலான குழு கண்காணிப்பதால், மக்கள் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.ஆனால், அனைவரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X