திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2020
10:24

கொல்லிமலை: 'திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றி, அதிக மகசூல் பெறலாம்' என, கொல்லிமலை வேளாண் உதவி இயக்குனர் கவிதா தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்ட அறிக்கை: கொல்லிமலை வட்டாரத்தில், கார் மற்றும் நவரை பருவத்தில், நெல் சாகுபடி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலா, 600 ?ஹக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், திருந்திய நெல் சாகுபடி முறையை பின்பற்றினால், அதிக மகசூல் பெறலாம். விவசாயிகள், தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு மேற்கொள்ள, இரண்டு கிலோ நெல் விதை போதுமானது. இரண்டு கிலோ விதையை கொண்டு, ஒரு சென்ட் பரப்பளவில், மேடை பாத்தி அமைத்து, நாற்றங்கால் தயாரிக்க வேண்டும். எட்டு முதல், 14 நாட்கள் வயதுடைய, இளம் நாற்றுகளை, சதுர முறையில் வரிசையாக, 25க்கு, 25 செ.மீ., இடைவெளியில், நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாசனம் செய்ய வேண்டும். கோனோவீடர் களையெடுக்கும் கருவியை கொண்டு நடவு செய்த, 10ம் நாள் முதல், 10 நாட்கள் இடைவெளியில், நான்கு முறை களையெடுக்க வேண்டும். மேலுரமாக, யூரியா உரத்தை, வேப்பம் புண்ணாக்குடன் கலந்து வயலுக்கு இடவேண்டும். மேலும், பூச்சி நோய் தாக்குதலுக்கு, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும். மேற்கண்ட திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பங்களை கடைப்பிடித்து, அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X