'கொரோனா தடுப்பூசி விரைவில் இலவசமாகக் கிடைக்கும்': உலக சுகாதார அமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

15 ஆக
2020
14:34
பதிவு செய்த நாள்
ஆக 15,2020 14:30

சென்னை: ''கொரோனா குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக கிடைக்கும்,'' என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.



நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் மருத்துவர் சவுமியா சாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது. இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில், உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சவுமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார்.



அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார்.

விருதைப்பெற்ற பின், சவுமியா சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:



உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.

உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன. நமது நாட்டில், 8 நிறுவனங்கள் அதற்கான முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
15-ஆக-202019:04:27 IST Report Abuse
Tamilnesan அம்மணி காசு கூட கொடுத்து விடுகிறோம்........தடுப்பூசியை பத்து நாட்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள்......உங்களுக்கு பெரிய புண்ணியமா போகும்.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
15-ஆக-202018:52:39 IST Report Abuse
Gnanam இலவசமாக வேண்டாம் ஒரு விலையை நிர்ணகிக்கலாம். ஆனால் அந்த விரைவு எப்போது நிறைவேறும் என்று சொல்லலாமா? நிதி திரட்டல் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டால் மக்கள் மனமுவந்து உதவுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X