வறுமையில் வாடிய 110 வயது மூதாட்டிக்கு கலெக்டர் உதவி | அரியலூர் செய்திகள் | Dinamalar
வறுமையில் வாடிய 110 வயது மூதாட்டிக்கு கலெக்டர் உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

04 செப்
2020
08:15

அரியலூர்: கொரோனா ஊரடங்கால், வறுமையில் வாடிய, 110 வயது மூதாட்டிக்கு, அரியலூர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., நிவாரண பொருட்கள் வழங்கினர்.


அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தைச் சேர்ந்தவர், பொன்னி, 110. இவரது கணவர், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கொரேனா ஊரடங்கால் மூதாட்டி மிகவும் கஷ்டப்பட்டார். இது குறித்து, செய்தி வெளியானது. இதை பார்த்த அரியலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஸ்ரீனிவாசன், நேற்று காலை மூதாட்டியின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். மூதாட்டிக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள், உடை ஆகியவற்றை, கும்பகோணம், 'பரமசாந்தி' என்ற அமைப்பின் உதவியுடன் வழங்கினார். கலெக்டர் ரத்னா உத்தரவுபடி, அரிசி, மளிகை பொருட்கள், சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை, செந்துறை தாசில்தார் முத்து கிருஷ்ணன் வழங்கினார்.


 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X