'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை | அரியலூர் செய்திகள் | Dinamalar
'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 செப்
2020
16:07

பெரம்பலுார்:
'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் மாவட்டம், எலந்தங்குழியை சேர்ந்தவர், விக்னேஷ், 19. செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2017ம் ஆண்டு பிளஸ் 2 படித்த விக்னேஷ், அரசு பொதுத் தேர்வில் 1,006 மதிப்பெண் பெற்றார்.கேரளாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்திலும், திருச்சி துறையூர் சௌடாம்பிகா நீட் தேர்வு மையத்திலும் பயிற்சி பெற்று, இரு முறை நீட் தேர்வு எழுதினார். தேர்ச்சி பெறவில்லை.மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத படித்து வந்தார். வரும், 13ம் தேதி தேர்வு எழுத இருந்தார். மிகுந்த மன உளைச்சலில் விக்னேஷ் இருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய விக்னேஷ், நேற்று மதியம், அருகில் உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். அப்பகுதியினர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, மறியலில் ஈடுபட்டனர். செந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் அரியலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X