புதுப்பெண் தற்கொலை | திருப்பூர் செய்திகள் | Dinamalar
புதுப்பெண் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 செப்
2020
23:36

தர்மபுரி, செம்மநாதபுரத்தை சேர்ந்தவர் சரவணன், 30. திருப்பூர் பி.என்., ரோட்டில் தங்கி, வேலைக்கு செய்து வந்தார். கடந்த பிப்., மாதம், இவருக்கும், பிரியங்கா, 27 என்பவருக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், சரவணன் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, பிரியங்கா துாக்குமாட்டி இறந்துகிடந்தார். புகாரின் பேரில், வடக்கு போலீசார், சடலத்தை கைப்பற்றினர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அத்துமீறல்வாலிபர் கைதுதிருப்பூரிரை சேர்ந்த ஹரிஸ், 24 என்பவர், 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அவர் குழந்தை பிரசவிக்க காரணமாக இருந்துள்ளார். இதற்கிடையில், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டதாக, திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் வந்தது. ஹரிஸ் மீது, 'போக்சோ' பிரிவில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரிஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசில், இவர் மீது கஞ்சா வழக்கும் உள்ளதுசெயின் திருட்டுஒருவர் கைதுவெள்ளகோவில் அருகே புதுப்பை திருவள்ளுவர் நகரில் வசிக்கும் திலகவதி என்பவரது வீட்டில், கடந்த மாதம், 19 ம் தேதி, 7 பவுன் நகை திருடுபோனது. வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்கில் தொடர் புடைய, திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி, தெற்கு தெருவை சேர்ந்த திவாகர், 25. என்பவரை கைது செய்தனர்.இவர் குடும்பத்துடன் பல்லடத்தில் தங்கியிருப்பது, விசாரணையில் தெரியவந்தது. காங்கயம் ஜே.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X