சென்னையில் கழிவுநீரை குடிநீராக்கும் திட்டம்; பிரிட்டிஷ் தூதரக தொழில்நுட்ப குழு உதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2020
22:57

சென்னை : சென்னையில், கழிவுநீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றி வினியோகிக்கும் திட்டத்தை, பிரிட்டிஷ் துாதரக தொழில்நுட்ப குழு உதவியுடன் செயல்படுத்த, வாரியம் திட்டமிட்டுள்ளது.சென்னையில், கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய, நான்கு இடங்களில், 72.7 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய, 12 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.இங்கு, 8.15 லட்சத்திற்கும் மேற்பட்ட கழிவுநீர் இணைப்புகள் வழியாக, தினமும், 53 கோடி லிட்டர் கழிவுநீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.இதில், கோயம்பேடு மற்றும் கொடுங்கையூரில், மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம் வழியாக, கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தினமும், 9 கோடி லிட்டர் குடிநீர், தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.பெருங்குடி மற்றும் நெசப்பாக்கத்தில், மூன்றாம் தர சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, கழிவுநீரை சுத்திகரித்து, மறு சுழற்சி செய்யப்பட்ட குடிநீர் தரத்திலான நீர், பெருங்குடி மற்றும் போரூர் ஏரிகளில் விட, சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப வழிகாட்டுதலில், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், அந்த ஏரி நீரை, மறு சுத்திகரிப்பு செய்து, தினமும், தலா, 1 கோடி லிட்டர் வீதம், 2 கோடி லிட்டர் நீரை குடிநீராக மாற்றி, வழங்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகள், 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.தற்போது, இதே பாணியில், கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் ஆகிய நான்கு நிலையங்களிலும், மூன்றாம் தர சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வாரியம் திட்டமிட்டுள்ளது.அங்கு, மூன்றாம் நிலையில், குடிநீர் தரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை, பெருங்குடி, போரூர், ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் உள்ளிட்ட, ஏழு ஏரிகளில் விட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, அந்த நீரை, மீண்டும் மறு சுத்திகரிப்பு செய்து, குடிநீராக மாற்றி, வினியோகம் செய்யப்பட உள்ளது.இந்த திட்டத்தில், மொத்தம், 26 கோடி லிட்டர் நீரை, பொதுமக்களுக்கு தினமும் வழங்க இயலும். இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடக்கின்றன.இந்த திட்டம், சென்னை ஐ.ஐ.டி., மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலில் நடக்க உள்ளது. இந்த திட்டத்திற்கு, பிரிட்டிஷ் துாதரகம் தொழில்நுட்ப உதவியை வழங்க உள்ளது. இதற்கான வழிகாட்டுதல் குழுவை, அந்த நாட்டு துாதரகம் அமைக்க உள்ளது.இந்த திட்டம், உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் போது, மாநகர குடிநீர் தேவையை, 25 சதவீதத்திற்கு மேல், பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளதாக, வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-202010:26:54 IST Report Abuse
Lion Drsekar அப்படி சுத்திகரிக்கப்பட்ட நீரை முக்கிய பிரமுகர்களுக்கு வழங்குவார்களா? எப்போதுமே வழங்குவார்களா ?அப்படியே வழங்கினாலும் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமனைவருக்கும் இந்த நீரை மேடையில் வைத்து குடிக்க கொடுப்பார்களா? வந்தே மாதரம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-செப்-202000:07:36 IST Report Abuse
தல புராணம்நல்ல கேள்வி.. லண்டனுக்கு ஏற்றுமதி செய்யலாம்.. பிரிட்டிஷ் தொழில்நுட்பம் ஆச்சே.....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-202010:25:02 IST Report Abuse
Lion Drsekar இந்த சுத்திகரிப்பு நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தி, அங்கு பயன்படுத்தப்படும் குடிநீரை மக்களுக்கு வினயோகிக்கலாமே ? கடல் நீரை சுத்திகதிர்த்து குடிக்க மற்றும் விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம், மனித இயல்பு முதல் சிலநாள் சட்டத்தை மீறாமல் சரியாக கழிவுநீரை சுத்தம் செய்வார்கள் பிறகு இலவசமாக கொடுக்கவேண்டிய குடிநீரை எப்படி விலைக்கு விற்கவேண்டிய நிலையோ அப்படி,கஹிவுநீரின் தரமும் இருக்கும், மக்களுக்கு புது வியாதி கண்டிப்பாக வரும், சாராயத்தில் கலப்படம், எண்ணையில் கலப்படம், இனி குடிநீரில் அதே நிலை. வந்தே மாதரம்
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
16-செப்-202010:14:54 IST Report Abuse
R chandar Install more plant of diesalination water and see to it water supply through pipeline instead of lorry services , avoid and eradicate freebies and subsidies and ute the same with in 2 months or before march 2021 and stop lorry services of water as we have lost many lives by this tem of supply
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X