அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை தேவை | செய்திகள் | Dinamalar
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2020
16:29

புதுச்சேரி : புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு ஊழியர்கள், வணிக வளாக ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் விஞ்ஞானிகள் குழு அளித்த பரிந்துரைப்படி, பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தினசரி 1500 பரிசோதனை செய்தபோது, 600 பேர் தொற்றால் பாதித்தனர். தற்போது, 3500 பேருக்கு பரிசோதனை செய்தாலும், 400 பேர் மட்டுமே பாதிக்கின்றனர்.


இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆரம்ப சுகாதார நிலையம், மொபைல் குழுக்கள், தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் பரிசோதனை செய்ய வேண்டும் என இலக்கு அளித்துள்ளனர். சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள், சிறுவர்கள் என அனைவரிடமும் பரிசோதனை செய்யப்படுகிறது.உண்மையில் காய்ச்சல், சளி இருமலுடன் உள்ளவர்கள் பரிசோதனைக்கு வருவதில்லை. தனிமைப் படுத்தி விடுவார்கள் என்பதால் பரிசோதனைக்கு வருவதில்லை, என்றனர்.


தற்போது, ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை மூலம் 20 நிமிடத்தில் கொரோனா தொற்று உள்ளதா, இல்லையா என தெரிந்து விடும்.இதனால் அனைத்து அரசு ஊழியர்களுக்கும், பெரிய வணிக வளாகம், சூப்பர் மார்க்கெட், துணி, நகை கடைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும். காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றும் பலர் வெளிமாநிலத்தில் இருந்து வருகின்றனர்.இதனால் தற்காலிக மார்க்கெட்டில் வேலை செய்யும் ஊழியர்கள், வெளிமாநில வியாபாரிகள், லாரி டிரைவர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X