தொழிலாளி தற்கொலை | செய்திகள் | Dinamalar
தொழிலாளி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 செப்
2020
16:31

பாகூர் : தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பாகூர் அடுத்துள்ள அரங்கனுார்பேட், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளம்பரிதி 36; தேங்காய்த்திட்டில் ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக ஓட்டலை திறக்க முடியாமலும், சரியான வேலை கிடைக்காமலும் இளம்பரிதி சிரமப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த இளம்பரிதி மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. அவரது மனைவி மகாலட்சுமி கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.


இதனால், விரக்தியடைந்த இளம்பரிதி நேற்று முன்தினம் மாலை யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு கூரையில் இருந்த இரும்பு கம்பியில், துாக்குப் போட்டுக்கொண்டார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில், பாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X