ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கும் இந்திய நிறுவனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

16 செப்
2020
17:04
பதிவு செய்த நாள்
செப் 16,2020 17:01

மாஸ்கோ: ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் -வி' ஐ, இந்தியாவில் முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் விநியோகிக்க, ரஷ்யா ஒப்பு கொண்டுள்ளது.


இது தொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்புட்னிக் -வி' மருந்தை, 300 மில்லியன் டோஸ் அளவு, இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும் 100 மில்லியன் டோஸ் மருந்து இந்தியாவில் செயல்படும் டாக்டர் ரெட்டி ஆய்வகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான, இந்தியாவின் ஒப்புதல் பெறப்படும். இந்தியாவில், மருந்து தரக்கட்டுபாட்டு தர ஆணையத்திடம் அனுமதி பெற்ற பின்னர், தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும். விநியோகிக்கும் பணியும் துவங்கும். விநியோகம் இந்த ஆண்டின் இறுதியில் துவங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


டாக்டர் ரெட்டி ஆய்வகத்தின் துணை தலைவர் ஜிவி பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்புட்னிக்-வி' மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பத்தகுந்த முடிவுகள் கிடைத்துள்ளன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், 'ஸ்புட்னிக் -வி' மருந்து சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனக்கூறினார்.



உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு மருந்தை கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் தீவிரமாக உள்ளன. ஆனால், முதல்நாடாக ரஷ்யா, கொரோனாவுக்கு 'ஸ்புட்னிக்-வி' மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்தது. ஆனால், இந்த மருந்து குறித்து விஞ்ஞானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தை வாங்குவதற்கு, ரஷ்யாவுடன் பிரேசில், மெக்சிகோ மற்றும் கஜகஸ்தான் நாடுகள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
18-செப்-202014:40:31 IST Report Abuse
Nallavan Nallavan இதனால் ஒரே நாளில் அந்த நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ஆறு நூறுக்கும் அதிகமாக் கூடியுள்ளது ........
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
16-செப்-202019:15:42 IST Report Abuse
Tamilnesan எப்படியோ மிக சீக்கிரம் தடுப்பு மருந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்து மனித உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும். அப்புறம் வச்சுக்கோங்க உங்க அரசியல் அக்கப்போரை. நல்ல வேளை தற்போது மோடிஜி அரசாங்கம் உள்ளது. இத்தாலி பினாமி சர்தார்ஜி ஆட்சி இருந்திருந்தால், நிலைமையை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. ஆண்டவன் மிக பெரியவன் என்பது நிரூபணமாகியுள்ளது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-செப்-202017:35:35 IST Report Abuse
RajanRajan குரானா தடுப்பு மருந்து சீனாவிடம் இருந்து மட்டும் வாங்க கூடாது. அவனுங்க தடுப்பு மருந்துன்னு சொல்லி உயிர் பலி வாங்கவும் தயங்கவே மாட்டான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X