ப.வேலூர்: பரமத்தி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் இறந்தது. ப.வேலூர் அடுத்த பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஆண் புள்ளிமான் ஒன்று காயமடைந்து நடக்க முடியாமல் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த போலீசார், நாமக்கல் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வன அலுவலர் காஞ்சனா உத்தரவின்படி, மாவட்ட வனச்சரகர் ரவிச்சந்திரன் மற்றும் வனத்துறையினர் காயங்களுடன் உயிருக்கு போராடி இறந்த புள்ளிமானை மீட்டனர். பின்னர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பரமத்தி இடும்பன் குளம் பகுதியில் இருந்து வழிதவறி இந்த மான் வந்திருக்கலாம்; சாலையை கடக்க முயன்ற போது வாகனத்தில் அடிப்பட்டிருக்கலாம்; ஐந்து வயதிருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.