| மும்மொழி கொள்கை தேவை: வி.பி.துரைசாமி கருத்து Dinamalar
மும்மொழி கொள்கை தேவை: வி.பி.துரைசாமி கருத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2020
08:07

நாமக்கல்: ''மும்மொழி கொள்கை நாட்டிற்கு தேவை,'' என, பா.ஜ.,மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறினார்.



மேலும் அவர் கூறியதாவது: தி.மு.க.,வில் இருந்து வந்தாலும் நான் நானாகவே இருக்கிறேன். தி.மு.க.,வில் இருந்து, பா.ஜ.,வில் சேர அதிகமானோர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சூர்யாவின் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 'நீட்' தேர்வை ஸ்டாலின், 10 மாதங்கள் ஆனால் கூட நிறுத்த முடியாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படிதான் தேர்வு நடக்கிறது. மும்மொழி கொள்கை நாட்டிற்கு தேவை. கொரோனா காலக்கட்டத்தால், ஜி.எஸ்.டி., வரியின் மாநிலங்களுக்கு திரும்ப அளிக்கும் தொகையை, இப்போது மாநிலங்களுக்கு வழங்குவதில் மத்திய அரசுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. விரைவில் படிப்படியாக மத்திய அரசு இந்த தொகையை வழங்கும். நாகர்கோவில் தொகுதியில் ஏற்கனவே, பா.ஜ., போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. எனவே பாராளுமன்ற இடைத்தேர்தலில் மீண்டும், பா.ஜ., போட்டியிடும். தமிழகத்தில், பா.ஜ., வேகமாக வளர்ந்து வரும் கட்சி. நாட்டின் எல்லை பகுதிகளில் இந்திய அரசின் ராணுவம் பலமாக உள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளை விரைவில் இந்தியா மீட்கும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X