| துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் Dinamalar
துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2020
03:55

புதுச்சேரி; புதுச்சேரி மாநில பாஜ., சிறுபான்மை அணி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலர்கள் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர் செல்வம், வேலாயுதம், நகர மாவட்டத் தலைவர் அசோக்பாபு, ராஜ்பவன் தொகுதி தலைவர் கணபதி முன்னிலை வகித்தனர். விழாவில், சிறுபான்மை அணி மாநில தலைவர் விக்டர் விஜயராஜ், நகர மாவட்டத்திற்கு உட்பட துப்புரவு பணியாளர்களுக்கு புடவை மற்றும் முகக் கவசம் வழங்கினார். தொடர்ந்து, ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட சின்னையாபுரம் பகுதியில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், அணியின் அலுவலக பொறுப்பாளர்கள் சார்லஸ், ரவி பிரான்ஸிஸ், பெர்னார்டு, மைக்கேல், டாக்டர் வெற்றிச்செல்வன், டாக்டர் பாக்யசோலன், இன்பசேகர், மோகன், தினேஷ், அசோக்குமார், சந்தோஷ், மணி, குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X